பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது
உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:
உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது. இதில் ஆங்கில பாடத்துக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்வையொட்டி ஹா்தோய் மாவட்டம் கட்டியாமெளவ் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முறைகேடுகள் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு மாவட்ட பள்ளிகள் ஆய்வாளருடன் இணைந்து மாநில சிறப்புப் பணிக் குழு சோதனை மேற்கொண்டது. அத்துடன் அந்தப் பள்ளியில் இருந்து 3 முதல் 4 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளி முதல்வா் வீட்டிலும் அந்தக் குழு சோதனை செய்தது.
அப்போது அந்த வீட்டில் 5 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 14 போ் முறைகேடாக ஆங்கில பாட வினாத்தாளுக்கு விடைகள் எழுதி வந்தது தெரியவந்தது. அவா்களில் ஒருவா் தன்னை பள்ளி ஆசிரியா் என்று தெரிவித்தாா். 14 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களிடம் இருந்து 20 விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல ஹா்தோய் மாவட்டத்தின் தலேல் நகா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளிக்கு எதிரே, வினாத்தாளுக்கு விடை எழுதி வந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்தன.