செய்திகள் :

ஊட்டத்தூர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு!

post image

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன் ஆய்வு செய்தார்.

இந்த பணிகளின்போது சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஊட்டத்தூர் சுத்தரத்தனேசுவர் கோயில் திருப்பணியின்பொழுது புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அக்கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது. கல்வெட்டுகளில் திருவூற்றத்தூர் என்றழைக்கப்பட்ட ஊட்டத்தூரில் மொத்தம் 13 கல்வெட்டுகள் புதியதாக கண்டறியப்பட்டன. இவற்றில் 5 கல்வெட்டுகள் முழுமையானவை மற்ற 7 கல்வெட்டுகள் துண்டுக் கல்வெட்டுகளாகவும் உள்ளன. துண்டுக் கல்வெட்டுகளில் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்திகளின் ஒரு பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளன. முழுமையாக உள்ள 5 கல்வெட்டுகளில் 4 கல்வெட்டுகள் சோழர் காலத்தியவை மற்றொன்று பாண்டியர் காலத்தைச் சார்ந்தது. 

இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள காலத்தால் முந்தைய முதலாம் ராஜராஜன் கல்வெட்டு (கி.பி.1009) இரண்டாம் திருச்சுற்றில் நூற்றுக்கால் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களான முதலாம் ராஜராஜன் முதல் முதலாம் ராஜாதிராஜன் காலம் வரையிலான கல்வெட்டுகள் ஏதும் கோயில் கருவறைச் சுவர்களில் காணப்படவில்லை, அதுமட்டுமின்றி அக்கல்வெட்டுகள் பிற்கால எழுத்தமைதியில் பொறிக்கப்பட்டுள்ளன.

விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஐந்து கல்வெட்டுகளில் 11-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டானது (கி.பி.1129) கருவறைக்கு முன்மண்டபத் தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விக்கிரம சோழன் காலத்தில் இக்கோயில் முழுவதுமாக புனரமைக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம். புனரமைப்பதற்கு முன்பிருந்த கோயில் கருவறை, இடைகழி மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றில் வெட்டப்பட்டிருந்த முதலாம் ராஜராஜன் முதல் முதலாம் ராஜாதிராஜன் வரையிலான கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு மீண்டும் நூற்றுக்கால் மண்டபத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை அவர்கள் வரலாற்றின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகின்றன

முதலாம் ராஜராஜன் காலத்தில் மழ நாட்டுப்பிரிவின் கீழ் இருந்த ஊட்டத்தூர் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட நிர்வாகப்பிரிவான ராஜாசிரிய வளநாட்டின் கீழ்  கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதை கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. தற்பொழுது கிணற்றுப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முதலாம் பராந்தகனின் மற்றும் முதலாம் ராஜராஜனது கல்வெட்டுகள் வாயிலாக விக்கிரமசோழன் காலத்திற்கு முந்தைய காலக்  கோயில் முதலாம் பராந்தகன் காலத்திலே எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்ற புதிய வராலாற்றுச் செய்தியைத் தெரிவிக்கிறது.

முதலாம் பராந்தகனின் 30வது ஆட்சியாண்டில் (கி.பி.937) திருவூற்றத்தூரில் வாழ்ந்த சுருதிமான் நிலவைலியன் என்பவரின் மனைவி பகவன் மணி நங்கை என்பவர் திருவூற்றத்தூர் பெருமானடிகள் கோயிலுக்கு கதவு செய்து கொடுத்துள்ளார்.

முதலாம் ராஜராஜனது 13-ஆம் ஆட்சியாண்டில்(கி.பி.998) நக்கன் அய்யாறன் என்கிற சுந்தரசோழ முத்தரையன் என்ற அதிகாரி இக்கோயிலில் இரவும் பகலும் எரியக்கூடிய நந்தா விளக்கினை எரிப்பதற்கு 30 பசுக்களை வழங்கியுள்ளார்.  ராஜராஜ சோழனின் 16-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1001) திருவூற்றத்தூர் கோயிலில் செயல்பட்டிருந்த மூலபருடை என்கிற நிருவாக சபையாரும் வாகலூர் ஊரைச் சார்ந்தவர்களும் திருவூற்றத்து நாட்டு நிர்வாகிகளும் இணைந்து கோயிலுக்குப் புன்செய் நிலம் வழங்கியுள்ளனர். 

முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை மற்றும் கடாரம் வெற்றிகள் பொதுவாக மெய்க்கீர்த்தி பகுதியில் இடம்பெற்றிருக்கும். இவ்வூர் கல்வெட்டொன்றில் கெங்கையுங் கடாரமுங்கொண்ட ஸ்ரீராசேந்திரசோழன் என்ற சிறப்புப்பெயருடன் கல்வெட்டுத் தொடங்குகிறது. 

பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 18-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1270) ஊற்றத்தூரில் வாழ்ந்த ஆயன் கவிகுமாரர் என்ற கவிக்கு இடைமலை, வெட்டுணி என்ற இரு ஊர்களை குன்ற கூற்றத்து நாட்டு நிர்வாகிகள் கொடையாக வழங்கிச் சிறப்பித்துள்ளனர். சுத்தரத்னேசுவரர் என்பது தொகுமாமணி என்பதன் வடமொழியாக்கம் என்பதையும், நெடுநாளாய் பாழாய்கிடந்த குளத்தை திருத்தி வேளாண்மை மேம்பட வழிவகை செய்துள்ளனர் என்பதையும் கல்வெட்டுகள் மூலம் உய்த்துணர முடிகிறது. 

தற்பொழுது புதியதாக கிடைத்துள்ள கல்வெட்டுகள் வாயிலாக முதலாம் பராந்தகன் காலத்திலேயே (கி.பி.937) இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்பதையும் முதலாம் பராந்தகன் காலத்தில் இவ்வூரைச் சார்ந்த பகவன் மணி நங்கை என்ற பெண்மணி இக்கோயிலுக்கு கதவு செய்தளித்துள்ள செய்தியும் ஊற்றத்தூரில் வாழ்ந்த ஆயன் கவிகுமாரர் என்ற கவிக்கு இரண்டு ஊர்களை அளித்து சிறப்பு செய்துள்ளனர் என்கிற செய்தியும் முக்கியமானவையாக உள்ளன.

இதையும் படிக்க | கர்னல் குரேஷி பற்றி அமைச்சர் சர்ச்சை கருத்து: வழக்கு மே 19-க்கு ஒத்திவைப்பு!

நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.அவற... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன்க... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய சடலம்!

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கரை ஒதுங்கி கிடப்பத... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி

கரூர் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிவிட்டு எதிரே வந்த சுற்றுலா வேன் மீதும் மோதியதில் பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கரூர் அடுத்த மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோதுர் பிரி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில் தேர்த் திருவிழா

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க