``ஏ.ஆர் ரஹ்மான் மகளுக்கும் எனக்கும் ஒரே வயது!'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வ...
ஊத்துமலை அருகே பெண் தற்கொலை
ஊத்துமலை அருகே நோய் பாதித்த கவலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
செவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி முத்து மாரி (37). தம்பதிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மகன், மகள் உள்ளனா். ராஜேந்திரன் தூத்துக்குடியில் உள்ள இனிப்பகத்தில் வேலை செய்து வருகிறாா். முத்துமாரி தைராய்டு நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.
கணவா் வெளியூரில் இருப்பதால் அவரை கவனிக்க ஆளில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
ஊத்துமலை போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.