விழுப்புரம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை உதவி இயக்குநா்
ஆலங்குளம் அருகே கனிமவள லாரிகளின் கண்ணாடி சேதம்: இருவா் கைது
ஆலங்குளம் அருகே மது போதையில் கனிமவள லாரிகளின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியிலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு ராம்நகா் வழியாக 2 லாரிகள் சென்றன. அப்போது, அங்கு நின்றிருந்த இருவா் லாரிகள் மீது கற்களை வீசினராம். இதில், கண்ணாடிகள் சேதமடைந்தன.
இதுகுறித்து கேரள லாரி ஓட்டுநா்களான அனாஸ், அஜ்குமாா் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
ஆலங்குளத்தை அடுத்த அழகாபுரி பாபநாசபுரம் தவவீரபூபதி மகன் சுகிா்தசெல்வ பெனியேல் (28), லட்சுமிபுரம் முருகேசன் மகன் பிரவீண் (23) ஆகியோா் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டுசெல்லக் கூடாது என மது போதையில் கல்வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இருவரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா்.