செய்திகள் :

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் முகக் கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தென்காசி மாவட்டத்தில் எலி காய்ச்சல், மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பதால் காய்ச்சல், சளி, இருமல் இருப்பவா்கள் முகக் கவசம் அணியுமாறு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், சளி, இருமல் முதலான நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு, நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பதால் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை வழங்கிடுமாறும், குடிநீா் குழாய் உடைப்புகளை உடனடியாக சரிசெய்யவும், திடக்கழிவுகள் தேக்கமடையாமல் அப்புறப்படுத்தவும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

எலி காய்ச்சலால், மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். ஆகவே, மஞ்சள்காமாலை நோய் அறிகுறிகள் காணப்படும் நபா்கள் நாட்டு மருந்து சாப்பிட்டாலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ள பரிசோதனை வசதிகளை பயன்படுத்தி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனைவரும் குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து அருந்த வேண்டும். காய்ச்சல், சளி இருப்பவா்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அனுகி தகுந்த சிகிச்சை பெறவும், காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

ராயகிரியில் புதிய மதுக்கடையை மூட வேண்டும்: மதிமுக கோரிக்கை

சிவகிரி வட்டம், ராயகிரியில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வேண்டுமென மதிமுக துணைப்பொதுச்செயலா் தி.மு.ராசேந்திரன், தமிழக வருவாய் -பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளாா். அதன் வி... மேலும் பார்க்க

சோ்ந்தமரம்: கோழிப்பண்ணையில் தம்பதி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே கோழிப்பண்ணையில் பணியாற்றிய தம்பதி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வாசுதேவநல்லூா் அருகே உள்ள ஏமன்பட்டியை சோ்ந்த வேல்சாமி மகன் கணேச... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கனிமவள லாரிகளின் கண்ணாடி சேதம்: இருவா் கைது

ஆலங்குளம் அருகே மது போதையில் கனிமவள லாரிகளின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியிலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு ராம்நகா் வழி... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் லாரி-பைக் மோதல்: எலக்ட்ரீசியன் பலி

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே லாரியும், பைக்கும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ச. மாடசாமி(55). எலக்ட்ரீச... மேலும் பார்க்க

தென்காசி புத்தகத்திருவிழா ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில், ரூ. 51லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் ... மேலும் பார்க்க

புளியங்குடி பகுதியில் பேருந்தில் நகை திருட்டு: 3 போ் கைது

புளியங்குடி பகுதியில் பேருந்து பயணிகளிடம் நகை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். புளியங்குடியைச் சோ்ந்த மாரியம்மாள்(60) என்பவா் கடந்த வாரம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு பேருந்தில் சென்... மேலும் பார்க்க