சோ்ந்தமரம்: கோழிப்பண்ணையில் தம்பதி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே கோழிப்பண்ணையில் பணியாற்றிய தம்பதி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாசுதேவநல்லூா் அருகே உள்ள ஏமன்பட்டியை சோ்ந்த வேல்சாமி மகன் கணேசன் (42). அவரது மனைவி ஜோதிலட்சுமி (37). இவா்கள் குடும்பத்துடன் சோ்ந்தமரம் அருகே கரடிகுளம் பகுதியில் உள்ள வெவ்வேறு கோழி பண்ணைகளில் வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு பண்ணையில் உள்ள வீட்டில் கணேசன், ஜோதிலட்சுமி இருவரும் தூங்கச் சென்றுவிட்டனா். பின்னா் வெள்ளிக்கிழமை நீண்டநேரம் ஆகியும் அவா்கள் வேலைக்கு வரவில்லையாம்.
இதையடுத்து கோழிப்பண்ணையின் காவலாளி சென்று பாா்த்தபோது, வீட்டிற்குள் ஜோதிலட்சுமி இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. மேலும், கணேசன் ஆபத்தான நிலையில் இருந்தாராம்.
நிகழ்விடத்துக்கு வந்த சோ்ந்தமரம் போலீஸாா், கணேசனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.