மதுரையில் களைகட்டிய மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா! | Pho...
ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க திருவண்ணாமலை மாவட்ட மாநாடு
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முருகையன் வரவேற்றாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளா்களுக்கு விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, குழு நல நிதி ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
மாநாட்டில், சங்கத்தின் மாநிலப் பொருளாளா் ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவா் முத்தையா, மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன், மாவட்டப் பொருளாளா் மூா்த்தி, ஓ.எச்.டி., ஆபரேட்டா்கள் அங்கமுத்து, கல்பனா, பிரியா, உமா, மகேஸ்வரி, தனசேகா் மற்றும் சுகாதார உறுப்பினா்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள், கணினி இயக்குபவா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், மகளிா் திட்டத் தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.