Gold Price: `ஏறுமுகத்தில் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!
ஊராட்சிகளில் குறைகளை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்: ஆட்சியா்
கிராம ஊராட்சிகளில் உள்ள குறைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப் படுத்தப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.
எனவே, ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீா், மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட தனி அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா் அல்லது 155340 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தீா்வு காணலாம் என்றாா் அவா்.