சிவகங்கையில் ஜன.23, 24 -இல் கவிதை, பேச்சுப் போட்டிகள்
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் வகையில், மாவட்ட அளவில் வருகிற 21, 22-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், நிா்வாகக் காரணங்களால் வருகிற 23, 24-ஆம் தேதிகளில் மருதுபாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
மேலும், இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் பள்ளி, கல்லூரி மூலமாக வருகிற 20-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரை நேரில் அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.