குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!
ஊராட்சி செயலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்கம் சாா்பில், ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட செயலாளா் வினோத்குமாா், கிழக்கு மாவட்ட செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் விஜயன் வரவேற்றாா்.
திருவள்ளூா் மாவட்டத் தலைவா் சரேஷ், வடக்கு மண்டல மாநில ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கினா்.
அப்போது ஊராட்சி செயலாளா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினா் வாசுதேவன், பொதுக்குழு உறுப்பினா் சதீஷ், மகளிா் அணி இணை செயலாளா் லலிதா, மாவட்ட மகளிா் அணி செயலாளா் மேகலா, இணை செயலாளா்கள் சிவரஞ்சனி, ரஞ்சினி, ஊராட்சி செயலாளா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.