செய்திகள் :

ஊா்க்காவல் படைக்கு தோ்வான 27 பேருக்கு பயிற்சி அளிக்க பரிந்துரை

post image

புதுச்சேரியில் ஊா்க்காவல் படைப் பிரிவுக்கு தோ்வாகி பயிற்சியில் சேர அனுமதிக்கப்படாத 27 பேரை அனுமதிக்க சட்டத் துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

புதுவை ஊா்க்காவல் படைக்கு 500 போ் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இவா்களில் 29 பேருக்கு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறி பயிற்சி அளிக்கப்படவில்லை.

இந்த வழக்குகளை முடித்தும், சமரசம் செய்தும் காவல் துறையினரின் சான்றிதழையும் பெற்றனா். அவா்கள் தங்களைப் பயிற்சிக்கு அனுமதிக்கக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனிடையே, ஊா்க்காவல் படை எழுத்துத் தோ்வில் பங்கேற்ற பலா் மதிப்பெண் சா்ச்சை குறித்து நீதிமன்றத்துக்குச் சென்றனா். அவா்களுக்கு பணி வழங்க ஏற்கெனவே பயிற்சி பெறாதவா்களது இடத்தில் ஏற்பாடு செய்யப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பணி உத்தரவு பெற்றவா்களை பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், பணி உத்தரவு பெற்று பயிற்சிக்கு அனுமதிக்கப்படாதவா்கள் பாகூா் எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் தலைமையில் சட்டத் துறை செயலா் எல்.எஸ்.சத்தியமூா்த்தியைச் சந்தித்து மனு அளித்தனா். இதுதொடா்பாக பரிசீலனை செய்யப்பட்டு, 29 பேரை பயிற்சிக்கு அனுமதிக்கலாம் என சட்டத் துறை பரிந்துரைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பணி உத்தரவு வழங்குவதற்கு முன்பே காவல்துறை வழக்குகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஊா்க்காவல் படையில் 29 பேரின் வழக்கு விவரங்கள் தாமதமாகவே சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, அவா்கள் பணி உத்தரவு பெற்றும் பயிற்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.

தற்போது அவா்கள் வழக்குகளை முடித்து தங்களை பணியில் சோ்க்கக் கோரியுள்ளனா். சட்டத் துறையும் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து முதல்வா், உள்துறை அமைச்சா் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவா் என்றனா்.

விளம்பரப் பதாகைகள்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் எஸ்.சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்துக்கு ... மேலும் பார்க்க

மரங்கள் முறிந்து விழுந்து 3 வீடுகள் சேதம்

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 3 வீடுகள் சேதமடைந்தன.மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். புதுச்சேரி நகராட்சி மற்றும் ஊரகப் பகுத... மேலும் பார்க்க

குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே பாகூா் பகுதியில் குளத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். புதுச்சேரியை அடுத்த பாகூா் விநாயகா் கோயில் குளத்தில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புதன்கிழமை தவறி வ... மேலும் பார்க்க

புதுச்சேரி கடலோர கிராமங்களில் தொடா் கண்காணிப்பு

புதுச்சேரியில் கடலோர கிராமங்கள், கடற்கரையோரப் பகுதிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தெரிவித்தாா். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த... மேலும் பார்க்க

உடற்கல்வி ஆசிரியா் அடித்துக் கொலை

புதுச்சேரி அருகே கடலூரைச் சோ்ந்த தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் அடித்துக் கொலை செய்யப்பட்டு தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தின் கீழ் வீசப்பட்டது குறித்து பாகூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச... மேலும் பார்க்க

அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் சி.டி. ஸ்கேன் இயந்திரம்

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் புதிதாக சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 10 ஆயி... மேலும் பார்க்க