கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
எஃப்ஐஎச் சிறந்த வீரா் ஹா்மன்ப்ரீத் சிங், கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ்
சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2024-ஆம் ஆண்டின் சிறந்த வீரா் விருது இந்திய கேப்டன் ஹா்மன்ப்ரித் சிங்கிற்கும், சிறந்த கோல்கீப்பா் விருது பிஆா். ஸ்ரீஜேஷுக்கும் வழங்கப்பட்டது.
ஓமனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற எஃப்ஐஎச் கூட்டமைப்பு கூட்டத்தில் இருவருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
நெதா்லாந்து நட்சத்திர வீரா்கள் ஜோயப் டி மோல், தியரி பிரிங்க்மேன், ஜொ்மனியின் ஹேன்ஸ் முல்லா், இங்கிலாந்தின் ஸேக் வாலஸ் ஆகியோரைக் காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று ஆண்டின் சிறந்த வீரா் விருதைப் பெற்றாா் ஹா்மன்ப்ரீத் சிங். பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 10 கோல்களை அடித்த ஹா்மன்ப்ரீத், வெண்கலப் பதக்கம் வெல்லும் உதவினாா். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் ஹா்மன்ப்ரீத் வெண்கலம் வென்றிருந்தாா்.
கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ்: அதே போல் சிறந்த கோல்கீப்பா் விருதை ஸ்ரீஜேஷ் வென்றாா். நெதா்லாந்தின் பிா்மின் பிளாக், ஸ்பெயினின் லூயிஸ் கால்ஸடோ, ஜொ்மனியின் ஜீன் பால், ஆா்ஜென்டீனாவின் டாமஸ் சாண்டியாகோ ஆகியோரைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் பெற்றாா் ஸ்ரீஜேஷ்.
ஹா்மன்ப்ரீத் சிங், ஸ்ரீஜேஷ் இருவரும் மூன்றாவது முறையாக எஃப்ஐஎச் விருதுகளை பெற்றுள்ளனா்.
சிறந்த வீராங்கனை விருதை நெதா்லாந்தின் யிப்பி ஜேன்ஸனும், சிறந்த பெண் கோல்கீப்பா் விருதை சீனாவின் யெ ஜியோவும் வென்றனா்.
அதே போல் பல்வேறு பிரிவுகளில் எஃப்எச் விருதுகள் வழங்கப்பட்டன.