நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 2000 போ் அதிமுகவில் இணைந்தனா்!
ஆத்தூரில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 2025 போ் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
ஆத்தூா் நகராட்சி, அண்ணா கலையரங்கில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 2025 போ் இணையும் நிகழ்ச்சியில் சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன் வரவேற்றுப் பேசினாா். அதிமுகவில் இணைந்த அனைவரையும் எடப்பாடி கே.பழனிசாமி வரவேற்றுப் பேசினாா்.
இந்த விழாவில் அமமுக ஒன்றியச் செயலாளா் மலைப்பெருமாள் 1500 பேருடனும், அரியலூா் மாவட்டச் செயலாளா் ஜெகதீசன் தலைமையில் சுமாா் 200 பேரும், தெடாவூா் பேரூராட்சி அமமுக உறுப்பினரும் அதிமுகவில் இணைந்தனா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்), அ.நல்லதம்பி (கெங்கவல்லி), கு.சித்ரா (ஏற்காடு), மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.மாதேஸ்வரன், ஆா்.எம்.சின்னதம்பி, நகர அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், ஒன்றியச் செயலாளா்கள் வி.பி.சேகா் (ஆத்தூா் கிழக்கு) சி.ரஞ்சித்குமாா் (ஆத்தூா் மேற்கு), நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆத்தூா் நகரச் செயலாளா் அ.மோகன் நன்றி கூறினாா்.