எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுவாரஸ்ய நிமிஷங்கள்...
மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மக்களவைத் தொடங்கியது. அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல், மணிப்பூர் வன்முறை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.
இதனால், மக்களவைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை செயல்பாடுகள் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.