எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!
சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடரை விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் பின்னுக்குத்தள்ளி டிஆர்பி பட்டியலில் 3ஆம் இடம் பிடித்துள்ளது.
கடந்த முறை முதல் 5 இடங்களிலுமே சன் தொலைக்காட்சியின் தொடர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் முந்தியுள்ளது.
10வது இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராமாயணம் தொடர் உள்ளது. இந்தத் தொடர், 6.61 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சின்ன மருமகள் தொடர் 6.97 புள்ளிகளுடன் இந்த வாரமும் தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளது.

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய அய்யனார் துணைதொடர் இந்த வாரம் 7.75 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்குச் சென்றுள்ளது. இந்தத் தொடரின் நடிகர்கள் சமீபத்தில் சின்ன திரைக்கான விருதுகளையும் வென்றிருந்தனர்.

7வது இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அன்னம் தொடர் உள்ளது. இத்தொடர், டிஆர்பி பட்டியலில் 7.92 புள்ளிகள் பெற்றுள்ளது.

6வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் மருமகள் தொடர் உள்ளது. கேப்ரியல்லா - ராகுல் ரவி நடிக்கும் இத்தொடர் 7.93 புள்ளிகள் பெற்றுள்ளது.

5வது இடத்தில் சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் நடிக்கும் கயல் தொடர் உள்ளது. இத்தொடர் டிஆர்பி பட்டியலில் 8.13 புள்ளிகள் பெற்றுள்ளது.

4வது இடத்தில் எதிர்நீச்சல் -2 தொடர் உள்ளது. திருச்செல்வம் இயக்கும் இத்தொடர், 8.27 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்குச் சென்றுள்ளது.

3வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. இந்தத் தொடர் 8.53 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

2வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. ஸ்வாதி கொண்டே - நியாஸ் கான் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்தொடர், 9.16 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முதலிடத்தில் இயக்குநர் தனுஷ் இயக்கும் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. மணீஷா - அமல்ஜித் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்தொடர், டிஆர்பி பட்டியலில் 9.29 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
