பங்குச் சந்தை: துடைத்தெறியப்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.7.46 லட்சம் கோடி!
`எதுவுமே செய்யாமல் நாளொன்றுக்கு ரூ.35 லட்சம் வருமானம் ' - சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர் சொல்வெதென்ன?
சீனாவைச் சேர்ந்த சோசியல் மீடியா இன்ஃப்ளேன்ஸர் ஒருவர், தான் சும்மா படுத்துக்கொண்டு வருமானம் ஈட்டுவதாக வெளிப்படையாகக் கூறியதையடுத்து, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். ஒரே நாளில் இவர் இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறினார். ஆனால் இவ்வளவு சம்பாதிக்க இவர் எந்த வேலையும் செய்யவில்லை என்று கூறியதுதான் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கூ ஜிக்சி என்பவர் சோசியல் மீடியாவில் நேரடி ஒளிபரப்பு (லைவ் ஸ்ட்ரீம்) செய்வதற்காக 2.79 மில்லியன் யுவான் கமிஷனுடன் 10.39 மில்லியன் யுவான் ( 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்) சம்பாதிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி, ``நான் சும்மா படுத்துக்கொண்டு சம்பாதிக்கிறேன். நீங்கள் எந்த அளவிற்கு விமர்சிக்கிறீர்களோ வெறுக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக நான் சம்பாதிக்கிறேன். மாதத்திற்கு லட்சக்கணக்கில் நான் சம்பாதிக்கவில்லை... ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் சம்பாதிக்கிறேன்" என்று அவர் கூறியதுதான் சோசியல் மீடியா பயனர்களை விமர்சிக்க வைத்துள்ளது.
இவர் சோசியல் மீடியாவில் பல வினோதமான விஷயங்களை செய்து புகழ் பெற்றவர். பந்தை விழுங்குதல் போன்ற வினோத செயல்களில் ஈடுபட்டு அதிக ஃபாலோயர்களை வைத்துள்ளார். கடந்த நவம்பரில் நான்டோங்கில் 20 மில்லியன் யுவான் (US$2.7 மில்லியன்) மதிப்புள்ள 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஓர் ஆடம்பரமான வில்லாவை வாங்கும் திட்டத்தை அறிவித்தது உட்பட, அவ்வப்போது தன்னிடம் இருக்கும் செல்வச்செழிப்பை வெளிப்படுத்தும் பழக்கத்தை கூ ஜிக்ஸி கொண்டுள்ளார். தான் எந்த வேலையும் செய்யாமல் சிரமமின்றி அதிக பணம் சம்பாதிப்பதாக அவர் கூறியதால்தான், பல எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார்.