119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?
கேரளா: ரயில் தீமில் கட்டப்பட்டுள்ள வீடு; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சொந்த வீடு கட்டுவது என்பது பலரின் கனவாக இருக்கும். அதையும் பார்த்து பார்த்து வித்தியாசமான முறையில் கட்டிக் கொள்கிறார்கள். வீட்டின் இன்டீரியர் டிசைன் எல்லாம் பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு டிசைன் செய்கிறார்கள். அந்த வகையில் வித்தியாசமான முறையில் கேரளாவில் கட்டப்பட்டுள்ள வீடு இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.
கேரளா கோழிக்கோட்டில் உள்ள ஒரு வீடு ரயில் தீமில் கட்டப்பட்டுள்ளது. அதாவது வீட்டின் சுவர் ஒரு ரயில் பெட்டியை போலவே மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்டிகள், ரயில் சக்கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு பார்ப்பதற்கு அப்படியே ரயிலை போன்று உள்ளது.
இதில் 2019 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்போது வீடு கட்டப்பட்டது என்பதை குறிக்கிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் இந்த வீட்டை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டதை எடுத்து பலரும் இதனை பிரமித்து பார்த்து வருகின்றனர்.
இந்த வீடியோ 65,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றதுள்ளது. பலர் தங்கள் பாராட்டுக்களை பகிர்ந்திருந்தனர். ஒரு பயனர், "நல்ல படைப்பாற்றல்”! என்றார். மற்றொருவர் ”இந்த வீட்டிற்கு ரயில் ஹவுஸ் என்ற பெயர் வைக்கலாம்" என்று கூறியிருந்தார். இன்னொருவர் "இந்த வீட்டில் உரிமையாளர் யாரும் ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்றாரா?" என்று கேட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.