செய்திகள் :

மகாத்மா காந்தி உருவப்படத்துடன் பீர் விற்பனை - சர்ச்சை புகைப்படத்தின் பின்னணி என்ன?!

post image

ரஷ்ய மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை இடம்பெற செய்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மகாத்மா காந்தி. இவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றிருக்கும். இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதை தரும் பீர்பாட்டிலில் காந்தியின் உருவப்படம் அச்சிடப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யாவில் தான் இவ்வாறு நடந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி இது தொடர்பாக ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நந்தினி சத்பாதியின் பேரனும் அரசியல்வாதியுமான சுபர்னோ சத்பாதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் காந்தியின் உருவம் இடம்பெற்றுள்ள பீர் பாட்டில் புகைப்படங்கள் உள்ளன. காந்தியின் பெயர்தான் அந்த பீர் பாட்டில்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரலானதையடுத்து, காந்தியின் பெயரில் விற்பனையாகும் பீர் பாட்டில்கள் குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் பீர் பாட்டில் தயாரிக்கும் ரிவோர்ட் என்ற நிறுவனம் ஓராண்டுக்கு முன்பே காந்தி உருவப்படம் பொறிக்கப்பட்ட பீர் பாட்டில்களின் விற்பனையை நிறுத்தி விட்டதாகவும், சமூக வலைதளங்களில் பரவுவது பழைய பாட்டில்களின் புகைப்படம் என்றும் விளக்கம் கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இருப்பினும் மகாத்மா காந்தியின் உருவம் மற்றும் கையொப்பத்துடன் கூடிய பீர் பாட்டில்களின் படங்கள் வைரலானதை அடுத்து, ரஷ்ய மதுபான உற்பத்தி நிறுவனமான ரிவோர்ட் மன்னிப்பு கேட்டுள்ளது.

மதுபானங்களை விற்பனை செய்வதில் காந்தியின் படம் தவறாகப் பயன்படுத்தப்படுவது இது முதன்முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் 71வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் பாட்டில்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டபோது இஸ்ரேலிய மதுபான நிறுவனம் இதே போன்ற சர்ச்சையில் சிக்கியது. அதன் பின்பு அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியது.

புனே: அடுக்குமாடி வீட்டில் 300 பூனைகளை வளர்த்த சகோதரிகள்... ஆய்வுக்குச் சென்று அதிர்ந்த அதிகாரிகள்!

புனே ஹடப்சர் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் 9வது மாடியில் இருக்கும் 3 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் வசித்து வருபவர் ரிது பரத்வாஜ். இவர் தனது சகோதரி ரிங்கு பரத்வாஜ் என்பவ... மேலும் பார்க்க

Kumbh Mela: போக்குவரத்து நெரிசல்; கங்கையில் 275 கி.மீ படகில் பயணத்து கும்பமேளாவில் நீராடிய நண்பர்கள்

உத்தரப்பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. பிரயக்ராஜ் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு நகரங்களிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து லட்சக... மேலும் பார்க்க

Agra: ரூ.50,000 சன்மானம், டிரோன், 3 மாத தேடல்... தொலைந்த நாயைக் கண்டுபிடித்த தம்பதி; என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் வசிப்பவர் தீபயன் கோஷ். இவரது மனைவி கஸ்தூரி. இவர்கள் ஆசையாக இரண்டு வளர்ப்பு நாய்களை வளர்த்து வந்தனர். எங்குச் சென்றாலும் வளர்ப்பு நாயையும் கூடவே அழைத்துச் செல்வர். தீபய... மேலும் பார்க்க

Gujarat: தாய் இல்லாத தன் 6 குழந்தைகளைக் கூண்டில் வைத்துப் பாதுகாக்கும் தந்தை; என்ன காரணம் தெரியுமா?

தனது குழந்தைகளைச் சிங்கம் மற்றும் சிறுத்தை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கத் தனித்துவமான முயற்சியைக் கையாண்டுள்ளார் ஒருவர். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் தாய் இல்லாத தன் குழந்தை... மேலும் பார்க்க

டெல்லி: அடுத்தடுத்து வந்த 100 பீட்ஸாக்கள்; எல்லாம் கேஷ் ஆன் டெலிவரி! - Ex லவ்வரை அதிர வைத்த பெண்

காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவா... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு டு ஆர்.சி.பி நியூ கேப்டன் - இந்த வார கேள்விகள்

த.வெ.க தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் பாதுகாப்பு, பி.எஸ்.என்.எல் (BSNL) லாபம், குடியரசுத் தலைவர் ஆட்சி, அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா, ஆர்.சி.பி அணிக்குப் புதிய கேப்டன் நியமனம் என இந்த வார சம்பவ... மேலும் பார்க்க