Gujarat: தாய் இல்லாத தன் 6 குழந்தைகளைக் கூண்டில் வைத்துப் பாதுகாக்கும் தந்தை; என்ன காரணம் தெரியுமா?
தனது குழந்தைகளைச் சிங்கம் மற்றும் சிறுத்தை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கத் தனித்துவமான முயற்சியைக் கையாண்டுள்ளார் ஒருவர். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் தாய் இல்லாத தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் ஒரு கூண்டு ஒன்று அமைத்து அதில் ஆறு குழந்தைகளையும் தங்க வைத்துள்ளார்.
தினமும் அந்த குழந்தைகள் இந்த கூண்டில்தான் உறங்குகிறார்கள். அந்த பகுதியில் சிறுத்தைகள், சிங்கங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இவ்வாறு முடிவு எடுத்துள்ளார். இவர் வயலின் வேலை பார்த்து வருகிறார். அந்த சமயத்தில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் அவர் குழந்தைகளைக் கூண்டில் தங்க வைக்கிறார்.

இதற்கு முன்பு இந்த மாவட்டத்தில் சிறுத்தை தாக்குதலால் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இவர் தன் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்துள்ளார்.
இது குறித்த அவர் பி.பி.சி-யிடம் தெரிவித்ததாவது, "குழந்தைகளை எப்படி சிறுத்தையின் தாக்குதலிருந்து பாதுகாப்பது என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பேன். நாங்கள் நான்கு நாய்க் குட்டிகள் வைத்திருந்தோம். அவற்றைச் சிறுத்தை வேட்டையாடி விட்டனர். அதனால் எனது குழந்தைகள் பயமாக இருப்பதாகக் கூறி இரவில் தூங்கவில்லை. இதை அடுத்து இவ்வாறு கூண்டு அமைத்து அவர்களைத் தங்க வைத்துள்ளேன்" என்று கூறியிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play