திருப்பதியில் கூட்ட நெரிசலை குறைக்க ஏஐ தொழில்நுட்பம்! ஆலோசனைக் கூட்டத்தில் முக்...
எந்த நம்பிக்கையில் இந்தியா பயிற்சி ஆட்டங்களில் விளையாடவில்லை; முன்னாள் கேப்டன் அதிர்ச்சி!
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடாத இந்தியாவின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ஐபிஎல் மெகா ஏலமா? பெர்த் டெஸ்ட் போட்டியா? மெகா ஏலம்தான்... ஆஸி. பயிற்சியாளர் முடிவு!
முன்னாள் கேப்டன் அதிர்ச்சி
பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடாத இந்தியாவின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல், தங்களது அணிக்குள் மட்டும் விளையாடி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ள இந்தியாவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தங்களது அணியில் உள்ள வீரர்களுக்கிடையே விளையாடுவது எப்படி சவாலனதாக இருக்கும். இந்தியா ஏ அணிக்கு எதிரான 3 நாள்கள் கொண்ட போட்டியையும் இந்திய அணி ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட விளையாடாத இந்திய அணியின் முடிவு ஆச்சரியமளிக்கிறது.
இதையும் படிக்க: “பெருமை கொள்கிறேன்...” இளம் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!
வாக்காவில் உள்ள ஆடுகளங்கள் பெர்த் ஆடுகளங்களைப் போன்றவை. அதனால், அங்கு பயிற்சி மேற்கொள்வது இந்திய அணிக்கு பலனளிக்கும். அங்கு பௌன்சர்கள் அதிகம் இருக்கும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணி வீரர்களுமே ஆண்டின் 12 மாதங்களிலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து அப்படியே பார்டர் - கவாஸ்கர் தொடரும் தொடங்குகிறது. பெர்த் டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் எவ்வாறு விளையாடப் போகின்றன என்பதை பார்ப்போம். வருடம் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதால் நவீன கால கிரிக்கெட் வீரர்கள், பயிற்சி ஆட்டங்கள் அவர்களுக்கு தேவையில்லை என நினைக்கலாம் என்றார்.