செய்திகள் :

'என்னாலயே நம்ப முடியல...' - ஆஸியை வீழ்த்தியது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்!

post image

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியாக பேசியவை இங்கே.

Team India
Team India

ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, ''ரொம்பவே பெருமையாக இருக்கிறது. என்னாலயே நம்பவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் எதை எதிர்பார்த்தோமோ அது நடந்திருக்கிறது. இந்தத் தொடரில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். ஆனால், செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். எங்களுக்கு சாதகமான ரிசல்ட்டை மட்டுமே கொடுக்கும் வகையிலான பெர்பார்மென்ஸை கொடுக்க வேண்டிய நாள் இது.

நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். அணிக்காக எதையும் செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் இருந்தோம். மூன்று போட்டிகளில் வரிசையாக தோற்ற போது எங்களின் திட்டங்களை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்பதை உணர்ந்தோம். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் நாங்கள் கடுமையாக சொதப்பினோம். ஜெமிமா ஆடியிருப்பது ஒரு அற்புதமான இன்னிங்ஸ். அவர் எப்போதுமே அணிக்காக பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடக்கூடியவர். கால்குலேட்டிவ்வாக இன்னிங்ஸை கட்டமைக்கக் கூடிய அவர் மீது எங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.

ஜெமிமா
ஜெமிமா

கிட்டத்தட்ட அவரை ஒரு கணிதவியல் நிபுணர் எனக் கூட சொல்லலாம். அவருடன் மகிழ்ந்து பேட்டிங் ஆடினேன். அவரை பார்த்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இந்த ஓவரில் 5 ரன்களை சேர்த்துவிட்டோம். இன்னும் 2 பந்துகள்தான் மீதமிருக்கிறது என எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அதன்மூலம் நம்மையும் ஊக்கப்படுத்திவிடுவார். இப்போதே நாங்கள் இறுதிப்போட்டியை பற்றி பேச தொடங்கிவிட்டோம். இந்த உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம். ரசிகர்களின் அன்பால் நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்தோம். இந்த தேசமே எங்களுக்கு பின்னால் இருப்பதாக உணர்கிறோம். தொடர்ந்து தோற்ற போது கூட உங்களால் எப்போது வேண்டுமானாலும் கம்பேக் கொடுக்க முடியுமென ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்காக இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்.' என்றார்.

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க

`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது ... மேலும் பார்க்க

Ind v Aus: "இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது"- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்... மேலும் பார்க்க

`RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டி... மேலும் பார்க்க

'இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய அந்த 45 நிமிட பயிற்சி!' - ரகசியம் என்ன தெரியுமா?

தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்திய பெண்கள் அணி வெல்லும் முதல் உலகக்கோப்பை என்பதால் இது ஒரு வரலாற்று வெற்றியாக பார்க்கப்பட... மேலும் பார்க்க