செய்திகள் :

"என்னிடம் தேர்வு குழுவினர் பேசுவதே கிடையாது"- இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரஹானே

post image

இந்திய அணியில் சில வருடங்களுக்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அஜிங்கியா ரஹானே.

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியவர்.

குறிப்பாக, 2020- 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரை வல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.

ஆனால் சில வருடங்களாக இந்திய அணியில் ரஹானே புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

அஜிங்கியா ரஹானே
அஜிங்கியா ரஹானே

இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரஹானே பேசியிருக்கிறார்.

" வயது என்பது எனக்கு வெறும் எண்ணிக்கை மட்டும் தான். களத்தில் எப்படி விளையாடுகின்றோம். நாம் எவ்வளவு உத்வேகத்துடன் இருக்கின்றோம் என்பதை பொறுத்துதான் அனைத்திலும் இருக்கின்றது.

களத்திற்குள்ளே கடினமாக உழைக்க வேண்டும். நான் ஆஸ்திரேலிய தொடரில் கண்டிப்பாக விளையாடுவேன் என்று நினைத்து இருந்தேன்.

தனிப்பட்ட முறையில் நான் அப்படித்தான் யோசித்து வந்தேன். ஆனால் என்னை அணியின் சேர்க்கவில்லை.

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது பற்றி தேர்வு குழுவினர் அதிகமாக பேசுகின்றனர்.

நானும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றேன்.டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன்.

பல ஆண்டுகளாக உழைத்து இருக்கின்றேன். என்னைப் போன்ற ஒரு அனுபவ வீரருக்கு நிச்சயம் கம்பேக் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை தேர்வு குழுவினர் வழங்க வேண்டும்.

அஜிங்கியா ரஹானே
அஜிங்கியா ரஹானே

ஆனால் என்னிடம் தேர்வு குழுவினர் பேசுவதே கிடையாது. ரோஹித் சர்மா தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றிருக்கிறார்.

இதன் மூலம் வயது வெறும் நம்பர் மட்டும்தான் என்பதை அவர் நிரூபித்து இருக்கிறார். ரோஹித், கோலி போன்ற வீரர்கள் பல ஆட்டங்களை நமக்காக வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் தான் நான் சொல்கின்றேன். உங்களுக்கு அனுபவம் என்பது மிகவும் தேவை.

இளம் வீரர்களை மட்டுமே வைத்து நாம் விளையாடக் கூடாது" என தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.

Shreyas Iyer: 'விலா எலும்பில் தசை கிழிவு' - ஸ்ரேயஸ் உடல்நிலை எப்படியிருக்கிறது? பிசிசிஐ அப்டேட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துணைக் ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் ICU-வில் ஷ்ரேயாஸ் ஐயர்! - என்ன நடந்தது?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது, இந்திய ஒருநாள் தொடர் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ்... மேலும் பார்க்க

Womens World Cup: மந்தனா, பிரதிகா அதிரடியில் வீழ்ந்த நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில் அரையிறுதியில் மீதமிருக்கும் ஓர் இடத்துக்கு செல்லப்போவது நீயா இல்... மேலும் பார்க்க

கோலியைப் பின்னுக்குத் தள்ளிய 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை; 37 வருட சாதனையை சமன் செய்த பிரதிகா

நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் மிஞ்சியிருக்கும் ஒரு இடத்தைத் தங்களுக்கானதாக மாற்ற நியூசிலாந்தும் இந்தியாவும் இன்று (அக்டோபர் 23) மோதின.இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான இப... மேலும் பார்க்க

`வாடி ராசாத்தி!' - சதமடித்த ஸ்மிருதி மந்தனா; இன்னும் 2 சதங்களில் காத்திருக்கும் சாதனை

இந்தியா மற்றும் இலங்கை நடத்திவரும் நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, அடுத்த 3 போட்டிகளில் தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்... மேலும் பார்க்க

AUS v IND: முடிவுக்கு வந்த இந்தியாவின் 17 வருட வெற்றிநடை; தொடரை வென்ற ஆஸ்திரேலியா

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.இந்த நிலையில், அடிலெய்டு மைதானத்தில் இர... மேலும் பார்க்க