டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவு!
என்ன, ஆப்பிள் ஐஃபோன் 16 மாடல் வெறும் ரூ.6800க்கா?
ஹோலி பண்டிகைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இணையதள வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்புகளின்படி, பயங்கர அதிர்ஷ்டசாலியாக இருந்தால், ஆப்பிள் ஐஃபோன் 16 மாடல் வெறும் ரூ.6,800க்கு வாங்க முடியும் என்கிறார்கள் இணையதளத்தில் சலுகைகளை சல்லடையாக சாலித்து பொருள்களை வாங்குவோர்.
சரி இந்த ஐஃபோன் விலை எவ்வளவு தெரியுமா? ஒன்றல்ல.. இரண்டல்ல. ரூ.79,900 ஆகும். அதாவது 128 ஜிபி மாடல் ஐஃபோன் விலை ரூ.80 ஆயிரத்துக்கு வெறும் 100 ரூபாய்தான் குறைவு. இந்த போனைத்தான் ஒருவரால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து அம்சங்களும் பொருந்தினால் ரூ.6800க்கு வாங்க முடியும் என்கிறார்கள்.
இந்த போனுக்கு ஃபிளிப்கார்ட் 12 சதவீத விலைச் சலுகை வழங்குகிறது. எனவே, ஃபிளிப்கார்ட்டில் இதனை ரூ.68,999க்கு வாங்கலாம்.
அடுத்து, ஒரு சில வங்கி பண அட்டைகள் மூலம் வாங்கினால், ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். இதனால், இந்த போன் விலை ரூ.66,999க்கு குறைகிறது.
இதில்லாமல் நீங்கள் பயன்படுத்தும் நல்ல நிலையில் உள்ள ஐஃபோனை கொடுத்துவிட்டு இந்த போனை வாங்க நினைத்தால் அதற்கு 60,200 தள்ளுபடியாக கிடைக்கும்.
உங்களிடம் நல்ல நிலையில் ஐஃபோன் இருந்து அதனை மாற்றிவிட்டு இதனை வாங்க வேண்டும் என்றால் ரூ.6,799க்கே வாங்கி விடலாம் என்கிறார்கள். ஆனால், நீங்கள் வைத்திருக்கும் ஐஃபோன் மாடல், எப்படி இருக்கிறது என்ற தரம் போன்றவைதான், இந்த விலைக்கு உங்களால் புதிய மாடலை வாங்க முடியுமா என்று தீர்மானிக்கிறது.
ஐஃபோன் 16 மாடல் ஏ18 பயோனிக் சிப் பொருத்தப்பட்டது. 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே. இதில், புதிய கேமரா கன்ட்ரோல் பொத்தானும் இணைக்கப்பட்டிருக்கிறது. 48 எம்பி ஃப்யூஷன் பிரைமரி லென்ஸ் மட்டுமல்லாமல், 12 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் இருக்கிறது.