செய்திகள் :

`என் RCB ரசிகர்களுக்கு; சின்னசாமி ஸ்டேடியத்தில்...' - நெகிழ்ந்த டூ பிளெஸ்ஸி

post image
2025 ஐபில் தொடருக்கான மெகா ஏலம் சவுதியில் நடைபெற்றது. இம்முறை நடந்த இந்த மெகா ஏலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

அதில் ஒன்றாக பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வந்த பாப் டூ ப்ளெஸ்ஸியை டெல்லி அணி 2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. இந்நிலையில் டெல்லி அணிக்கு செல்லும் பாப் டூ பிளெஸ்ஸி தற்போது ஐபில் குறித்தும் பெங்களூரு அணி குறித்தும் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

டூ பிளெஸ்ஸி

அந்தப் பதிவில், " மூன்று வருடங்களுக்கு முன்பு நான் ஆர்சிபி அணியில் இணைந்தபோது, ​​இந்தப் பயணம் எப்படி அமையும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சின்னசாமி மைதானத்தில் விளையாடியதுதான் எனது கிரிக்கெட் பயணத்திலேயே மிகச்சிறந்த அனுபவம்.

நான் இங்கு இப்படி இருப்பதற்கு இந்த மக்கள்தான் முக்கிய காரணம். ஒவ்வொரு முறையும் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைக்கும்போதும் ரசிகர்கள் மேஜிக்கை நிகழ்த்துவார்கள்.

இந்த அற்புதமான நிகழ்வுகளை நான் மறக்க மாட்டேன். இந்த மூன்று வருடங்களை எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி. எனது அணியினர், ரசிகர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

CSK: 'ஏலத்தில் முறைகேடு; CSK வுக்கு மட்டும் சாதகமான அம்பையர்கள்' - குற்றம்சாட்டும் லலித் மோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் மீது லலித் மோடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தும் அதன் உ... மேலும் பார்க்க

``My Dear RCB... இப்படி ஒரு பந்தம் உருவாகும் என்று நினைக்கவில்லை!'' - முகமது சிராஜின் எமோஷனல் பதிவு

கடந்த ஏழு ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்த முகமது சிராஜ் தற்போது குஜராத் அணியில் விளையாட இருக்கிறார். நடைபெற்று முடிந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக பெங்களூரு அணியால் ... மேலும் பார்க்க

Urvil Patel: `28 பந்துகளில் சதம்'; IPL-ல் Unsold ஆன இரண்டே நாளில் பண்ட் சாதனை முறியடித்த இளம் வீரர்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மெகா ஏலத்தில், ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை யாரும் போகாத ... மேலும் பார்க்க

IPL: 'ரிஷப் நீங்கள் எப்பவும்..!'- லக்னோவுக்கு செல்லும் பன்ட் குறித்து டெல்லி உரிமையாளரின் பதிவு

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக நடைபெற்றது.இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் தரப்பில் 182 வீரர்கள் வாங்கப்பட்டு இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெ... மேலும் பார்க்க

Champions Trophy : இரண்டு நாளில் முக்கிய மீட்டிங்; சாம்பியன்ஸ் டிராபியை நடத்துமா பாகிஸ்தான்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தவிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பமாட்டோம் என பிசிசிஐ உறுதியாக கூ... மேலும் பார்க்க

Deepak Chahar: "என் இதயம் எப்போதும் CSK-வுடன் தான்.." - தீபக் சஹாரின் மனைவி நெகிழ்ச்சி

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ. 27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் போனது முதல் டேவிட் வார்னர், கேன் வி... மேலும் பார்க்க