செய்திகள் :

எம்புரான் டிரைலரை பார்த்த ரஜினி என்ன சொன்னார்?

post image

நடிகர் ரஜினிகாந்த் எம்புரான் டிரைலர் பார்த்ததை ப்ரித்விராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.

மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இதையும் படிக்க: திட்டமிட்டபடி கூலி படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ்!

எம்புரான் படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரித்விராஜ், “எம்புரான் டிரைலரை பார்த்த பின் நீங்கள் என்னிடம் சொன்னவை என் வாழ்நாளுக்குமானது. இந்த உலகமே எனக்கானதுபோல் இருக்கிறது. ஒரிஜினல் சூப்பர்ஸ்டாரே, நான் எப்போதும் உங்களின் தீவிர ரசிகன்” எனத் தெரிவித்துள்ளார்.

எம்புரான் படமே மோகன்லால் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமென்பது குறிப்பிடத்தக்கது.

பணவரவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.19-03-2025புதன்கிழமைமேஷம்:இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரிய... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம்

பங்குனிப் பெருவிழாவையொட்டி, திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும்... மேலும் பார்க்க

பிரதமர் மோடி உடன் இளையராஜா சந்திப்பு - புகைப்படங்கள்

இளையராஜா உடனான சந்திப்பில் அவரிடம் சிம்பொனி இசை குறித்து பிரதமர் மோடி ஆர்வத்துடன் உரையாடினார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், மாநிலங்களவை உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்... மேலும் பார்க்க

குடும்பம் கிடைத்தது..! ஹிருதயப்பூர்வம் படப்பிடிப்பு குறித்து மாளவிகா நெகிழ்ச்சி!

நடிகர்கள் மோகன்லால், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, அதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் ... மேலும் பார்க்க

பேபி & பேபி படத்தின் ஓடிடி தேதி!

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான பேபி & பேபி. திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்... மேலும் பார்க்க