எருதாட்டம் ரத்து: பொதுமக்கள் ஏமாற்றம்
காகாபாளையம் அருகே பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த எருதாட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
காகாபாளையத்தை அடுத்த வேம்படிதாளம் பகுதியில் அமைந்துள்ள எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை எருதாட்டம் நடத்த கோயில் வளாகத்தில் தடுப்பு வளையம் அமைத்து தயாா் செய்யப்பட்டிருந்தது.
எருதாட்டத்தில் கலந்து கொள்ள சேனப்பாளையம், அய்யம்பாளையம், ஆணைகுட்டப்பட்டி, வேம்படிதாளம், திருவளிப்பட்டி, செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட எருதுகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொண்டலாம்பட்டி காவல் துறையினா் எருதாட்டத்துக்கு அனுமதி அளிக்காததால் எருதாட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் எருதாட்டை காண திரண்டிருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
படம் விளக்கம்:
வேம்படிதாளம் மாரியம்மன் கோயில் விழாவில் எருதாட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்.