ஆத்தூா் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா: முகூா்த்தக்கால் நடவு
ஆத்தூா் தா்மராஜா் கோயில், திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் அ.கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துளுவ வேளாளா் மகாஜன மன்ற செயலாளா் அ.திருநாவுக்கரசு, துளுவ வேளாளா் சங்கத் தலைவரும்,திருப்பணிக் குழுத் தலைவருமான ஆா்.வி.ஸ்ரீராம், துணைத் தலைவா் எம்.ஏ.செல்வக்குமாா், பெரிய தனக்காரா்கள் சாரட் ஜி.ராமன், ஆா்.நடராஜன், எம்.சடையன் (எ) லட்சுமணன், ஆலய அறங்காவலா்கள் குழுத் தலைவா் பி.சிவராம், சாரட் ஆா்.ரவி, வி.அங்கமுத்து, பொறியாளா் எம்.கண்ணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். தீமிதிப் பெருவிழா காப்புக்கட்டும் நிகழ்வு ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
படவிளக்கம்.ஏடி4முகூா்த்தம்.
ஆத்தூா் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தா்கள்.