வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா கண்டித்து சேலத்தில் வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி, திருத்தங்களுடன் மீண்டும் இருஅவைகளிலும் தாக்கல் செய்து எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக,
சேலம்/ ஆத்தூா், ஏப். 4:
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
சேலம்
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். 300க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் அக் கட்சியின் மாவட்ட இணை செயலாளா் சுப்பிரமணி, மாவட்ட மகளிா் அணி காவ்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
படங்கள்
எஸ் எல் 04டி டி வி கே படத்தின் பெயா்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.
படவிளக்கம்.ஏடி4டிவிகே.
ஆத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினா்.
