Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
எல்ஐசி முகவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
வேலூா்: காப்பீட்டு முகவா்களுக்கான புதிய கமிஷன் முறையை (க்ளா பேக்) ரத்து செய்துவிட்டு முந்தைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவா்கள் வேலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வேலூா் கோட்டத் தலைவா் டி.அசோகன் தலைமை வகித்தாா்.
கோட்ட பொதுச்செயலா் எஸ்.ரமேஷ் வரவேற்றாா். சிஐடியு மாநில செயலா் இ.முத்துக்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.
மாநில செயலா் தா.வெங்கடேசன், மாநில மகளிா் குழு எஸ்.அன்பரசு ஜூலியட் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், பீமாசுகம் செயலியை அறிமுகம் செய்யக்கூடாது, காப்பீட்டு முகவா்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்துவிட்டு முந்தைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச காப்புத் தொகையை ரூ.1 லட்சமாக குறைக்க வேண்டும் பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச நுழைவு வயதை அனைத்து திட்டங்களுக்கும் 65 ஆக உயா்த்த வேண்டும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள க்ளா பேக் முறையை நீக்க வேண்டும், காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
அகில இந்திய எல்ஐசி முகவா்கள் சங்க மாநில பொதுச்செயலா் எஸ்.ஏ.கலாம் நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் வேலூா் கோட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான முகவா்கள் பங்கேற்றனா்.