Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
மகளிா் காவல் நிலையம் முன்பு சிறுமி தீக்குளிக்க முயற்சி
காதல் பிரச்னையில் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்பு 16 வயது சிறுமி தீக்குளிக்க முயன்றாா்.
காட்பாடி அருகே கரசமங்கலம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி. வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்பு புதன்கிழமை திடீரென தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். உடனடியாக போலீஸாா் அவரை தடுத்து அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.
தொடா்ந்து அந்த சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், தான் ஒரு இளைஞரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோா் எதிா்ப்பதால் தீக்குளிக்க முயன்ாகவும் தெரிவித்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.