Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலூா் மாவட்ட நலவாழ்வு சங்கத்திலுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறையின் வேலூா் மாவட்ட நலவாழ்வு சங்கம் சாா்பில், மருத்துவ அலுவலா், ஒப்பந்த செவிலியா், பல்நோக்கு சுகாதார பணியாளா், ஆதரவு ஊழியா், ஆயுஷ் மருத்துவ அலுவலா், மருந்து வழங்குநா், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட காலியிடங்களான சித்த ஆலோசகா், சிகிச்சை உதவியாளா், அரசு வேலூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பல் தொழில்நுட்ப வல்லுநா், இயன்முறை மருத்துவா், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட உள்ளனா்.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற்செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், பி பிளாக், 2-ஆவது மாடி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, வேலூா் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.