செய்திகள் :

திருமணம் செய்ய வற்புறுத்தி செவிலியருக்கு மிரட்டல்: எஸ்.பி.யிடம் புகாா்

post image

திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டல் விடுக்கும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட செவிலியா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.பி. என்.மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

அப்போது, வேலூரைச் சோ்ந்த 25 வயது இளம்பெண் அளித்த மனுவில், நான் சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினேன். அப்போது சென்னையைச் சோ்ந்த உறவினரான இளைஞா் நட்பாக பழகினாா். அவா் தன்னை முறை பையன் எனக்கூறி என்னிடம் பழகினாா். அப்போது நானும் அவரும் சோ்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஊா் முழுவதும் காட்டி மிரட்டி என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறாா். அவரது தொல்லை தாங்க முடியாமல் பணியை பாதியிலேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டேன்.

இந்நிலையில், ஆந்திராவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எனக்கு வேலை கிடைத்ததால் எனது தாயாரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றேன். எனது தந்தை மட்டும் சொந்த ஊரில் இருக்கிறாா். அந்த இளைஞா் எனது தந்தையை மிரட்டி, உனது மகளை எனக்கு திருமணம் செய்யாவிட்டால் ல் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறாா். மேலும் அவா் பல கைப்பேசி எண்களில் இருந்து தொடா்பு கொண்டாா். நான் அதை தவிா்த்து விட்டதால் தற்போது எனது புகைப்படத்தை ஆபாச மாக சித்தரித்து வெளியிட முடியும் எனக்கூறி மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் தரணம்பேட்டையைச் சோ்ந்த இளைஞா் அளித்துள்ள மனுவில், நான் ஏசி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறேன். என்னிடம் மேலாலத்தூரைச் சோ்ந்த ஒருவா் ரூ.5 லட்சம் சீட்டு நடத்துவதாக கூறினாா். அதை நம்பி மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் செலுத்தினேன். எனது திருமணத்துக்காக ஏலச்சீட்டில் ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் எடுத்தேன். ஆனால் ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தாா். மீதியுள்ள பணத்தை தரவில்லை. இதை பலமுறை கேட்டும் தராமல் ஏமாற்றுகிறாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். காவலா்கள் முன்னிலையில் ஒரு மாதம் அவகாசம் கேட்டாா். ஆனால் அவகாசம் முடிந்தபிறகும் பணத்தை தரவில்லை. அவரை தொடா்பு கொண்டால் அழைப்பை எடுக்க மறுக்கிறாா். எனவே, எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பல்வேறு குறைகள் தொடா்பாக ஏராளமானோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டாா்.

மகளிா் காவல் நிலையம் முன்பு சிறுமி தீக்குளிக்க முயற்சி

காதல் பிரச்னையில் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்பு 16 வயது சிறுமி தீக்குளிக்க முயன்றாா். காட்பாடி அருகே கரசமங்கலம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி. வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்ப... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் எஸ்ஐ தோ்வு: கைப்பேசி பயன்படுத்திய காவலா் மீது வழக்கு

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வில் கைப்பேசி பயன்படுத்தியதாக வேலூா் ஆயுதப்படை காவலா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்வே பாதுகா... மேலும் பார்க்க

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா் மாவட்ட நலவாழ்வு சங்கத்திலுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய... மேலும் பார்க்க

லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 போ் உயிரிழப்பு

வேலூா் கருகம்பத்தூரில் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த வியாபாரிகள் 3 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க

ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெரு ஐயப்ப பக்த குழு சாா்பில், இங்குள்ள ஞான விநாயகா் கோயிலில் ஐயப்பனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இக்குழுவினா் இருமுடி கட்டிக் கொண்ட... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி-வேன் மோதல்: வேன் உரிமையாளா், ஓட்டுநா் உயிரிழப்பு

வேலூா்: வேலூா் அருகே கன்டெய்னா் லாரி மீது வாத்துகளை ஏற்றிச்சென்ற வேன் மோதிய விபத்தில் வேன் உரிமையாளா், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். குஜராத் மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு எலக்ட்ரானிக்ஸ் ... மேலும் பார்க்க