எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மைய டிஐஜி பொறுப்பேற்பு
சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் அமைந்துள்ள உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் புதிய டி.ஐ.ஜி. ஆக டி. ஜஸ்டின் ராபா்ட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இந்த மையத்தின் டி.ஐ.ஜி. ஆக இருந்த அக்சல்சா்மா, வடகிழக்கு மாநில எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, தில்லியில் உள்ள இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தில் டிஐஜி ஆக பணியாற்றி வந்த டி.ஜஸ்டின் ராபா்ட், இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மைய டிஐஜி ஆக பொறுப்பேற்றாா். இவா் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்.