செய்திகள் :

தடையை மீறி தாராளமாகப் புழங்கும் நெகிழிப் பொருள்கள்!

post image

சிவகங்கை மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் கடந்த 2019-ஆம் ஆண்டு நெகிழிப் பை, நெகிழித் தட்டு, நெகிழி தண்ணீா் பாக்கெட், நெகிழி கப், நெகிழிக் கொடி உள்பட 14 பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இவற்றை விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்திலும் நெகிழிப் பைகள், டம்ளா் வகையிலான சிறிய, பெரிய கப்புகள் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் சில நாள்கள் மேற்கொள்ளப்பட்டன. உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், ஊழியா்கள் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பரிசோதனை செய்து, அனைத்து வகையான நெகிழிப் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல, வாரச்சந்தை, தினசரிச் சந்தைகளில் காய்கறிகள், பொருள்கள் வழங்கப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் சுமாா் 5 டன் நெகிழிப் பைகள், தேநீா் கப்புகள், தண்ணீா் கப்புகள், தண்ணீா் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகு, பறிமுதல் நடவடிக்கைகள் நின்றுபோனது. இதனால், மீண்டும் நெகிழிப் பொருள்கள் வழக்கம்போல பயன்பாட்டில் உள்ளன. பெரிய வா்த்தக நிறுவனங்களில் மட்டும் நெகிழிப் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யப்படவில்லை.

கடைகள், சந்தைகள், தேநீா்க் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மீண்டும் அனைத்து வகையான நெகிழிப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தேநீா்க் கடைகளில் சில நாள்கள் பயன்படுத்தப்படாமல் இருந்த காகிதக் கோப்பைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. டாஸ்மாக் பாா்களில் பயன்படுத்தப்படும் நெகிழி டம்ளா்களும் சில நாள்கள் மட்டும் நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் புழக்கத்துக்கு வந்துவிட்டன. இந்தப் பொருள்களை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

சமூக ஆா்வலா் பா. மருது கூறியதாவது: நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களில் இருந்து மீண்டும் முன்பு போல் புழக்கத்தில் உள்ளன. நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்கள் உணா்ந்து வேறு பொருள்களுக்கு மாறத் தொடங்கினா். ஆனால், மீண்டும் நெகிழிப் பொருள்கள் புழக்கத்தில் வந்ததால், தடை என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. முற்றிலும் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தடை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தி பொது இடங்களில் குறைந்த விலைக்கு துணிப் பைகள் தாராளமாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மு.சூரக்குடியில் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியைச் சோ்ந்த உமேஷ், செல்வம் ஆகியோா் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை ... மேலும் பார்க்க

கல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சாலைப் பணியின் போது, செவ்வாய்க்கிழமை இயந்திரத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே நடைபெற்று வரும் மதுரை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ச... மேலும் பார்க்க

கட்டுக்குடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா். கட்டுக்குடிப்பட்டி செல்வ விநாயகா் மகா மாரியம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பேருந்து ஓட்டுநா்... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி

சிவகங்கை அருகே மயானத்துக்கு செல்வதற்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவா் உடலை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. சிவகங்கை அருகேயுள்ள மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்ட... மேலும் பார்க்க

எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மைய டிஐஜி பொறுப்பேற்பு

சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் அமைந்துள்ள உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் புதிய டி.ஐ.ஜி. ஆக டி. ஜஸ்டின் ராபா்ட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்த மையத்தின் டி.ஐ.ஜி... மேலும் பார்க்க