செய்திகள் :

``எல்லை மீறி அவரை பேசிவிட்டேன்; வருத்தப்படுகிறேன்'' - ட்ரம்ப் குறித்து எலான் மஸ்க்.. சமாதனமா?

post image

உற்ற தோழர்களாக இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த வாரம் எலியும், பூனையுமாக மாறி சண்டை போட்டு கொண்டனர்.

ட்ரம்பின் 'ஒன் பிக் அன்ட் பியூட்டிஃபுல் பில்'லிற்கு எலான் மஸ்க் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியது இந்தச் சண்டை. 'எலான் மஸ்க் ஒன் பியூட்டிஃபுல் பில்லுக்கு அதிருப்தி தெரிவித்தது எனக்கு வருத்தம். எலெக்ட்ரிக் கார்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்ததனால் தான் அவர் இப்படி பேசுகிறார்' என்று ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் பேசிய இந்த வீடியோக்களை டேக் செய்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து எதிர்க்கருத்துளைத் தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில், எப்ஸ்டீன் என்ற பாலியல் மற்றும் மனிதக் கடத்தல் குற்றவாளியின் ஃபைலில் ட்ரம்ப் பெயர் உள்ளது. அதனால் தான், அந்த ஃபைல் வெளியிடப்படவில்லை என்றெல்லாம் எலான் மஸ்க் ட்ரம்பை கடுமையாக சாடியிருந்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இன்னும் ஒரு படி மேலே போய், புதிய கட்சி தொடங்கவும் திட்டமிட்டார் எலான் மஸ்க். இதற்கடுத்து என்ன ஆனது... ஏது ஆனது என்று தெரியவில்லை. தற்போது எலான் மஸ்க் பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "அதிபர் ட்ரம்ப் குறித்து கடந்த வாரம் நான் போட்ட சில பதிவுகள் குறித்து நான் வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் இந்தப் பதிவு இருவருக்கும் இடையே சமாதனமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Doctor Vikatan: இதயத்தில் 100% அடைப்பு.. குணப்படுத்த வாய்ப்பு உள்ளதா?

Doctor Vikatan: என்உறவினருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில்ஆஞ்சியோகிராம் செய்தார்கள். அதில் அவருக்கு 100 சதவிகித அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பைபாஸ் அறுவை ச... மேலும் பார்க்க

US attacks on iran: ``போர் அபாயம், பேரழிவு தரும்.." - ட்ரம்பை கண்டித்த அமெரிக்க தலைவர்கள்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. இஸ்ரேலுடன் அமெரிக்கா கைகோர்த்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. மூன்று அணு ஆயுத தளங்களை அமெரிக்கா க... மேலும் பார்க்க

போரில் களமிறங்கிய அமெரிக்கா: ``ஈரானின் 3 அணு ஆயுத தளங்களை தாக்கிவிட்டோம்..'' - ட்ரம்ப் சொல்வதென்ன?

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், ``ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்க... மேலும் பார்க்க

``முருக பக்தர் மாநாட்டில் நாங்கள் ஓட்டுக் கேட்க போவதில்லை'' - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு மாதிரி அரங்கை பார்வையிட்டு தரிசனம் செய்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்த... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேலின் சிறந்த நண்பர் ட்ரம்புக்கு நன்றி'' - நெதன்யாகு புகழ்ச்சிக்கு காரணம் என்ன?

இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ``இஸ்ரே... மேலும் பார்க்க

``கர்நாடக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்..'' - மத்திய அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி

கர்நாடக அமைச்சர்கள் கூட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர் பரமேஸ... மேலும் பார்க்க