செய்திகள் :

எல் கிளாசிக்கோ: ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா!

post image

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டி ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணியும் கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி திடலில் நடைபெற்றது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் பார்சிலோனா தொடக்கம் முதலே கோல் அடிக்க முயன்றுகொண்டே இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக பந்து ரியல் மாட்ர்டிட்டின் கிளியன் எம்பாபேவிடம் செல்ல, போட்டியின் 5ஆவது நிமிஷத்திலேயே அதை கோலாக மாற்றினார்.

அடுத்து பார்சிலோனாவின் இளம் வீரர் லாமின் யாமல் 22 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.

கவியை வேண்டுமென்றே இடித்ததால் ரியல் மாட்ரிட் கமவிங்காவுக்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டது. அதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் 36ஆவது நிமிஷத்தில் லெவண்டாவ்ஸ்கி அதில் கோல் அடித்து அசத்தினார்.

தொடர்ச்சியான கோல்கள் மழை

அடுத்ததாக 39ஆவது நிமிஷத்தில் ரஃபினா தனது தலையால் அற்புதமான ஹெட்டரினால் பார்சிலோனாவின் 3ஆவது கோலை அடித்து கலக்கினார். காயத்தினால் வெளியேறிய பார்சிலோனா வீரர் இனிகோ மார்டினீஸுக்கு ஆகொரோஷமாக பேசியதால் கள நடுவர் மஞ்சள் அட்டையை கொடுத்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் ரியல் மாட்ரிட்டிக்கு கிடைத்த கார்னர் கிக் பார்சிலோனாவுக்கு சாதகாமானது. ரஃபினா உதவியின் மூலம் அலீஜாண்ட்ரோ பால்டே 45+10 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

முதல் பாதி முடிவின் பார்சிலோனா 4-1 என முன்னிலையில் இருந்தது. முதல்பாதிவரை 67 சதவிகிதம் பந்து பார்சிலோனா அணியிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாதியில் முயற்சித்த ரியல் மாட்ரிட்

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் 48ஆவது நிமிஷத்தில் ரஃபினா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

57ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா கோல் கீப்பர் வோஜ்சீச் ஸ்செஸ்னிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதனால் 10 வீரர்களுடன் விளையாடத் தொடங்கியது.

ரியல் மாட்ரிட் அணியின் ரோட்ரிகோ 60ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியில் பெரும்பாலான நேரம் பந்து ரியல் மாட்ரிட் அணியினரிடம் இருந்தது.

96ஆவது நிமிஷத்தில் கிளியன் எம்பாபே அடித்த பந்தினை பார்சிலோனா அணியின் கோல் கீப்பர் அற்புதமாக தடுத்தார்.

இதன்மூலம் 15 முறை ஸ்பானிஷ் கோப்பையை வென்று அசத்தியுள்ளது பார்சிலோனா அணி.

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.13.01.2025மேஷம்இன்று கொடுக்கல்-வாங்கலில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வீண்கஷ்டங்கள் ஏற... மேலும் பார்க்க

அறிவுசாா் உன்னதத்தை அடைய புத்தகங்களைப் படிப்பது அவசியம்:

அறிவு சாா்ந்த உன்னத நிலையை ஒரு சமூகம் அடைவதற்கு புத்தகப் படிப்பு அவசியமாகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தாா். சென்னை நந்தனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பபாசியின் 48-ஆவது சென்னை... மேலும் பார்க்க

பலத்த மழையுடன் தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன்: சபலென்கா, ஸெங், அலெக்ஸ் வெரேவ், கேஸ்பா் முன்னேற்றம்

நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போா்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழையுடன் தொடங்கியது. மகளிா் நடப்பு சாம்பியன் அா்யனா சபலென்கா, ஒலிம்பிக் சாம்பியன் ஸெங் குயின்... மேலும் பார்க்க

களைகட்டும் ஸ்ரீ மகா கும்பமேளா 2025 - புகைப்படங்கள்

மகா கும்பமேளா முன்னிட்டு சாதுக்கள் மீது மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்.பிரயாக்ராஜில் மகா கும்பமேளா முன்னிட்டு ஊர்வலத்தில் பங்கேற்ற மடாதிபதிகள். பாரம்பரிய காவி உடை அணிந்து வரும் ஸ்ரீ பஞ்சாயத்தி அகாரா மட... மேலும் பார்க்க

சர்வதேச காத்தாடி திருவிழா 2025 - புகைப்படங்கள்

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச காத்தாடி திருவிழாவில் காத்தாடியுடன் பங்கேற்ற வெளிநாட்டு பெண்.குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்ற சர்வதேச காத்தாடி திருவிழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள்.ராஜ்கோட்டில் சர்வதேச... மேலும் பார்க்க

நடிகர் அஜித் குமாருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

அஜித் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி, மூன்றாவது இடம்பிடித்து ... மேலும் பார்க்க