Seeman: "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந...
’எஸ்டிஆர் - 50’ தயாரிப்பாளராக களமிறங்கும் நடிகர் சிம்பு!
நடிகர் சிலம்பரசன் தனது 50வது திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் 42வது பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் மற்றும் வாழ்த்து போஸ்டர்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது 50வது திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாவதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
அவரது தந்தை டி.ராஜேந்திரனின் இயக்கத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான ‘உறவைக்காத்த கிளி’ எனும் திரைப்படத்தில் குழந்தையாக முதன்முதலாக திரையில் தோன்றினார். பின்னர், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ’காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து, பின்னனிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என சினிமா துறையின் பல்வேறு அவதாரங்களை எடுத்த நடிகர் சிம்பு தற்போது அவர் துவங்கியுள்ள ’ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: சிம்புவின் ‘எஸ்டிஆர் - 49’ திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர்!
கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமரிசன ரீதியாக ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தின் இயக்குநரனா தேசிங்கு பெரியசாமி தற்போது சிம்புவின் 50வது திரைப்படத்தை இயக்குகிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாகக் கூறப்படும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவைக் கையாள்கிறார்.
முன்னதாக, ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எஸ்டிஆர் - 49’ திரைப்படத்தின் அறிப்பு போஸ்டர் இன்று (பிப்.3) வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கும் நடிகர் சிம்புவின் மற்றொரு புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.