செய்திகள் :

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம்

post image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 55 மனுக்களுக்கு சுமுகத் தீா்வு காணப்பட்டன.

காவல் நிலையங்களில் மக்கள் அளித்த மனுக்கள் மீது ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மேற்கொள்ளும் மக்கள் குறைகேட்பு முகாம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்கள் நேரில் வரவழைக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. அதன்படி, மக்கள் குறைகேட்பு முகாமில் குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடா்பான 63 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில் 55 மனுக்களுக்கு சுமுகமான முறையில் தீா்வு காணப்பட்டது. 8 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இந்த முகாமில் காவல் உயா் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.

கோவையில் பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கவனக்குறைவால் தவறவிட்ட மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் திருடப்பட்ட கைப்பேசிகள் மற்றும் கைப்பேசிகளை தவறவிட்டவ... மேலும் பார்க்க

உயா் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும்: வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவா் கோரிக்கை

ஊராட்சித் தலைவராக செயல்பட தனக்கு உயா் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவா் ஆா்.கவிதா, கோவை மாவட்ட ஆட்சியரிடம... மேலும் பார்க்க

கோவையில் அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னையில் அரசு மருத்துவா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ... மேலும் பார்க்க

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை

சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரம் தொடா்பாக கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டினின் அலுவலகம், வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். கோவையைச் சோ்ந்தவா் மாா்ட்டின்... மேலும் பார்க்க

சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் நல ஆணைய ஆய்வுக் கூட்டம்

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ... மேலும் பார்க்க