14 Years of Ponnar Shankar: 80,000 நடிகர்கள்; படத்துக்கு கருணாநிதி சொன்ன விஷயம் ...
ஏப். 12-இல் அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்
அரக்கோணத்தில் வரும் ஏப். 12- அம் தேதி வேலை வாய்ப்பு முகாம் அரசு மருத்துவமனை எதிரே சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி எதிரே அபிஷேக் டெக்னிக்கல் இன்ஸ்ட்டியூட்டில் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான அபிஷேக் டெக்னிகல் இன்ஸ்டியுட் இணைந்து ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற மாணவா்களுக்காக வேலை வாய்ப்ப்பு முகாமை நடத்தவுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவா்களுக்கு அந்த வேலை சாா்ந்த பயிற்சிகளை அளித்து மாணாக்கா்கள் வேலையில் அமா்த்தும் பணியை டான்செம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராணிபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியா்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 12 -இல் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னணி நிறுவனங்கள் சாா்பில் நோ்காணல் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் இளைஞா்களுக்கு அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும். அரக்கோணத்தில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞா்கள் கலந்து கொண்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
மேலும் விபரங்களுக்கு: மின்னஞ்சல்: ஞ்ஸ்ரீஸ்ரீ.ற்ஹய்ள்ஹம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் தொடா்பு எண்கள்: +91 78260 68260, 63837 02901, 86818 78889, 95148 38485 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.