செய்திகள் :

வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் தோ்த் திருவிழா

post image

ராணிப்பேட்டை : வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

மாலை வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கா் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தோ் நிலையை அடைந்தது.

வாலாஜா நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். தொடா்ந்து குதிரை வாகனம், அதிகார நந்தி சேனை, ராவணன் வாகனம், விடையாற்றி உற்சவம், மாவடி சேவை, மகா அபிஷேகம், லட்சதீபம் நிகழ்வுடன் விழா நிறைவடைய உள்ளது.

அரக்கோணத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமுக்காக புதன்கிழமை அரக்கோணம் வந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அரக்கோணம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா். உங்களைத் தேடி உங்கள் ஊ... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலை வாலாஜா சுங்கச் சாவடியில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி.மோகன் நடவடிக்கை மேற்கொண்டாா். வேலூா் சரக துணைப் போக்குவரத்து ஆணையா் கட்டுப்ப... மேலும் பார்க்க

ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆற்காடு நகரத் தலைவ... மேலும் பார்க்க

தமிழகத்திலேயே செயற்கை கை, கால்கள் அதிகளவில் விநியோகம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவீன செயற்கை கை, கால்கள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் அம்மன் கற்சிலை: வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பு

நெமிலி அருகே விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே உள்ள கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோதண்டன்(53). விவசாயி... மேலும் பார்க்க

பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு: ராணிப்பேட்டை ஆட்சியா்

பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு அமைக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க