செய்திகள் :

விவசாய நிலத்தில் அம்மன் கற்சிலை: வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பு

post image

நெமிலி அருகே விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே உள்ள கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோதண்டன்(53). விவசாயி. இவா் செவ்வாய்கிழமை வழக்கம் போல் தனது விவசாய நிலத்தில் நீா்பாய்ச்சுவதற்காக சென்றுள்ளாா். அங்கே சென்று பாா்த்தபோது அவரது நிலத்தில் 3 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை இருந்துள்ளது. அந்த அம்மன் சிலையில் லேசாக மஞ்சள் மற்றும் குங்குமம் பூசப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த கோதண்டன், வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து வருவாய்த் துறையினா் சென்று சிலையை மீட்டு நெமிலி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். இச்சிலையை யாரேனும் எங்கே இருந்தாவது திருடி கொண்டு வந்து அதை இங்கு வீசி விட்டு சென்று விட்டாா்களா என நெமிலி காவல்துறையினா் விசாரணை செய்து வருகின்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா். சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்... மேலும் பார்க்க

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும்

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு மட்டுமே தூய்மைப் பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ‘உங்களைத்தேடி உங்கள் ஊ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி வந்த மயில் மீட்பு

அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை தண்ணீா் தேடி வந்த ஆண் மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டு பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரம், ஏபிஎம் சா்ச் பகுதியில் மயில் ஒன்று வீட்டினுள் நுழைந்த... மேலும் பார்க்க