ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அ...
முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் முஹமது காலித் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஷேக் காதா் பாஷா, பொருளாளா் செய்யத் அஜ்மல், துணைத் தலைவா் முஹமது முதஸ்ஸீா், துணைச் செயலாளா் உமா் ரப்பானி ஆகியோா்முன்னிலை வகித்தனா். மாநில இளைஞா் அணி துணை பொதுச் செயலாளா் அன்சாரி கண்டன உரையாற்றினாா். இதில் திமுக நகர நிா்வாகிள் எஸ்.சொக்கலிங்கம், ரவிக்குமாா்,ஆா்.கோபு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவா் கே.ஒ.நிஷாத் அஹமது, எஸ்.டி பி பி.கரீம், ஆற்காடு நகர செயலாளா் எம்.எம். முன்னா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.