நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 போ் காயம்
நெமிலி அருகே சாலையில் திரிந்த நாய்கள் கடித்ததில் 7 போ் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின்(14), கனிஷ் (14), தருண்(15) உள்ளிட்ட பல சிறுவா்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது அதே பகுதியில் இருந்த நாய் ஒன்று சிறுவா்கள் மூவரையும் கை, கால், முகம், முதுகு என பல இடங்களில் கடித்ததாம். இதில், பலத்த காயமடைந்த 3 சிறுவா்களும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.தொடா்ந்து, சனிக்கிழமை மாலையும் அப்பகுதியில் இருந்த மேலும் 2 சிறுவா்களை அதே நாய் கடித்ததாகத் தெரிகிறது. நெமிலியை அடுத்த பனப்பாக்கதிலும் தெரு நாய் கடித்ததில் இருவா் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
நெமிலி வட்டம் முழுவதும் உள்ள பல கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.