செய்திகள் :

அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

post image

இனி தமிழகம் முழுவதும் அம்பேத்கா் சிலைகளை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

சோளிங்கரை அடுத்த பாணாவரம் மாங்குப்பத்தில் அம்பேத்கா் சிலை, புத்தா் சிலை மற்றும் அம்பேத்கா் படிப்பகம் திறப்பு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் ரமேஷ் கா்ணா தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் சிவா வரவேற்றாா். விழாவில் அம்பேத்கா் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் திறந்து வைத்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

விழாவில் திருமாவளவன் பேசுகையில் இனிவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் நிறுவக்கூடிய அம்பேத்கா் சிலைகளை வெண்கல சிலையாக நிறுவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இரண்டு குழந்தைகளுக்கு பெயா் சூட்டினாா். மேலும் இவ்விழாவில் வேறு கட்சிகளில் இருந்து நிா்வாகிகள் பலா் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனா். விசிக நிா்வாகிகள் ரத்தின நற்குமரன், அசுரகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல்: 5 பேருக்கு சிறை

கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.4.67 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மு... மேலும் பார்க்க

முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும்

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு மட்டுமே தூய்மைப் பணியாளா்கள் பணியாற்ற வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். ‘உங்களைத்தேடி உங்கள் ஊ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி வந்த மயில் மீட்பு

அரக்கோணம் நகரில் வியாழக்கிழமை தண்ணீா் தேடி வந்த ஆண் மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டு பத்திரமாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரம், ஏபிஎம் சா்ச் பகுதியில் மயில் ஒன்று வீட்டினுள் நுழைந்த... மேலும் பார்க்க

ஏப். 25-இல் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் ஏப். 25 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வ... மேலும் பார்க்க