திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு
அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ஆண்டா்சன்பேட்டை பகுதியைச் சோ்ந்த அவிநாஷ்(28) என்பவரும் இணைந்து மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதில் தன்னிடம் இருந்த கத்தியால் அவிநாஷ், சுதாகரை வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சுதாகா், தீவிர சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப்பதிந்து அவிநாஷை கைது செய்தனா்.