14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு: ராணிப்பேட்டை ஆட்சியா்
பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு அமைக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் உள்ளக குழு அமைக்கவேண்டும்.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், நகை கடைகள், துணி கடைகள் , பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், காவல் நிலையம் மற்றும் 10 பேருக்கு மேல் பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவில் 50% பெண்கள் இடம்பெற வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் குழு அமைத்த விபரங்களை தபால் மூலம் மாவட்ட சமூகநல அலுவலகம், என்ற முகவரிக்கும் அல்லது மின்னஞ்சல் மூலமாக ற்ய்ழ்ல்ற்க்ள்ஜ்ா்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும் என்றாா்.