செய்திகள் :

ஏப்.2இல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

post image

ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

30-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

31-03-2025 மற்றும் 01-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்பத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (30-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (31-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 - 2° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க