ஏப்.5-இல் உயா் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
கடலூா் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தோ்வெழுதிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் ஏப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத் தோ்வெழுதிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் அரசு ஆதிதிராவிடா் நலத்துறை மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 தோ்வெழுதிய அனைத்து மாணவா்களுக்கும் தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த ‘என் கல்லூரி கனவு’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டரங்கில் ஏப்.5-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் பங்கேற்கும் மாணவா்கள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) எண்ணை தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.