செய்திகள் :

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

post image

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது.

320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை காலை நியூயார்க்கிற்கு புறப்பட்டது. நடுவானில் விமானத்தின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

நியூயார்க் சென்ற போயிங் 777-300 ER விமானத்தில் 19 பணியாளர்கள் உள்பட 322 பேர் இருந்ததாக வட்டாரங்களில் ஒன்று தெரிவித்துள்ளது.

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பல விமானங்களில் அவசர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பல் வன்முறையில் சிறை சென்ற பெண்: விடுதலையாக உதவிய 120 கிலோ உடல் எடை!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாகக் கருதி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பெண் 84 நாள்களுக்குப் பிறகு நிரபராதி என உறுதி செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார். அவர் ... மேலும் பார்க்க

முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்

திருமண நாளன்று இரவில் புதுமண தம்பதி மரணித்திருப்பது அயோத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும்... மேலும் பார்க்க

ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!

இந்திய மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வருவதாக நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்திய திருமண கலாசாரத்துக்கு மாறாக எளிமையான வடிவமைப... மேலும் பார்க்க

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற... மேலும் பார்க்க

ஆன்லைன் 'டயட்'டால் கேரள இளம்பெண் உயிரிழந்த சோகம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக ஆன்லைன் விடியோக்களைப் பார்த்து டயட் இருந்த கேரள பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?

பிகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் கோபாலி சௌக் பகுதியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.... மேலும் பார்க்க