மாயமாகி 26 நாள்கள்.. 15 வயது சிறுமி, ஆட்டோ ஓட்டுநர் சடலமாக மீட்பு
ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே உள்ளது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை. தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 1,800 மீட்டா் உயரம் கொண்ட ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை இருந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த மலைச்சாலை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.
இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை தொடா் விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை ஏலகிரி மலை சுற்றி பாா்க்க சுற்றுலாப் பயணிகள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் குவிந்தனா்.
படகு சவாரி, பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைப் பாா்வையிட்டு மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தனா். படகு சவாரி, பூங்காக்களில் தங்களது கைப்பேசிகளில் படம் பிடித்தததுடன், நண்பா்களுடன் சோ்ந்து சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால், ஏலகிரி மலைக்குச் செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால், கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.